செவ்வாய், 28 ஜனவரி, 2025

ஆறுமுகம் வெண்பா ( செவ்வாயிற் செவ்வேள்)

ஆறுமுகங் கொண்டருள வானைமுகன் றம்பியுண்
டேறுமுகந் தானே யெமக்கென்று - நூறுமுகம்
போதாது கந்தன் புகழுரைக்க வென்றாலு
மோதாம லோய்ந்திடுமோ நாள்



ஆறு முகம் கொண்டு அருள ஆனை முகன் தம்பி உண்டு
ஏறு முகம் தானே எமக்கு என்றும் நூறு முகம்
போதாது கந்தன் புகழ் உரைக்க என்றாலும்
ஓதாமல் ஓய்ந்திடுமோ நாள்

 

#முருகன் 

படம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி