செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

அறியா வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

அறியாப் பிழையை யறுத்தெறியு மாறே முறைகாட்டு மூவா முருகா - கறைக்கண்டர்க் காசானே ஞானத் தடிச்சுவடே நின்னருளா னீசனும் வாழ்வே னிறைந்து

 

 

அறியாப் பிழையை அறுத்து எறியும் ஆறே

முறை காட்டும் மூவா முருகா - கறைக் கண்டர்க்கு

ஆசானே ஞானத்து அடிச் சுவடே நின் அருளால்

நீசனும் வாழ்வேன் நிறைந்து

 

படம் 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்