திங்கள், 17 பிப்ரவரி, 2025

ஞாலங்கள் வெண்பா

ஞாலங்கள் யாவு நகைத்தருளு மாங்குறையுங்
காலங்கள் யாவுமவள் கண்ணழகு - கோலங்கொ
ணாடெங்கு வீற்றருளு நாயகியி னேமியெனத்
தாடங்கந் தாங்கு செவி 

ஞாலங்கள் யாவும் நகைத்து அருளும் ஆங்கு உறையும்

காலங்கள் யாவும் அவள் கண்ணழகு கோலம் கொள்

நாடு எங்கும் வீற்று அருளும் நாயகியின் நேமி எனத் 

தாடங்கம் தாங்கு செவி

 

ஞாலங்கள் யாவையும் புன்னகைத்து அருள்பவளும், அங்கு உள்ள மூன்று காலங்களும் அவளின் மூன்று கண்ணின் அழகாக கொண்டவளும் , கோலம் கொண்ட இப்பாரத நாடெங்கும் வீற்று அருளும் நாயகியான அகிலாண்டேஸ்வரி தனது ஸ்ரீ சக்ர ரூபத்தைச் செவியில் தாங்கும் தோடாக வைத்துள்ளால் ( திருவானைக்கா என்னும் தலத்தில்)

 

She who sports a smile and graces all multiple universes and has the threefold time as her beautiful eyes, she who stays in the beautiful land called Bharat in various Shakti Peethams, that beautiful Goddess Akilandeswari has her Sri Chakra Roopa in her ear rings in the Thiruvaanaikka Sthala.


படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்