புதன், 19 பிப்ரவரி, 2025

இரவுமாகி கலிப்பா

இரவுமாகிப் பகலுமாகி யிறைவனாகி யிறைவியா
யுருவமாகி யருவமாகி விரவிநின்ற யாதுமாய்க்
கருவுமாகிக் கதியுமாகிக் கனியதோடு காயுமா
யொருவளான வுயர்வையெண்ன வுணர்வளித்த ளென்கொலோ

 

 

 
இரவும் ஆகி பகலும் ஆகி இறைவன் ஆகி இறைவியாய்

உருவும் ஆகி அருவும் ஆகி விரவி நின்ற யாதுமாய்

கருவும் ஆகி கதியும் ஆகி கனி அதோடு காயுமாய்

ஒருவள் ஆன உயர்வை எண்ண உணர்வு அளித்தள் என் கொலோ?

 

இரவும், பகலும் உருவம் அருவம், காய் கனி என்ற இரு நிலைகளானவள் அவளே தான் , இறைவனாகவும் வந்து இறைவியாகவும் வந்து, யாதுமாய் விரவி நிற்பவள் அவளே தான் , இப்பிறப்பெடுக்கும் கருவும் இவ்வுலகினை உய்த்துணர பிறகு கதியாய் வீடு அளிப்பவளும் அவளே தான், இப்பேற்பட்ட தனி ஒருவளின் உயர்வினை எண்ண உணர்வளித்தவளும் அவளே தான், இது என்ன வியப்பு!

 

 She (that peerless one) became night and day, God and Goddess, form and formless, and everything manifest and unmanifest, the seed and the ultimate salvation, the fruit and vegetable and all the dualities from the singularity.That peerless one has also given us the thought to marvel at her greatness, what a wonder!

 

படம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்