வியாழன், 20 பிப்ரவரி, 2025

ஆறடுக்கு விருத்தம்

ஆறடுக்கு நேமியெறி யாறுடுத்து நாதனைத் 

          தீரணைத்து நீமணக்க மூலமான வுந்துநீ
 

யேறடுக்கு நேரநின்ற சிக்கலான மும்முடி 

           சீரமைக்கக் கட்டவிழ்க்க மூலமான வாற்றனீ
 

நூறடுக்கு மாடியேறி யுச்சிகாணு வெற்றிபோ 

          லாறுமாறு மாகிநின்ற வந்தரத்தி லாழ்ந்துனைக்
 

கூறொடுக்கிக் காலடக்கிக் கன்னியுன்னைக் காணவுங் 

          கோதிலாத வுன்றனாற்றல் கூடநிற்க வேண்டுமே 

 

சீர் பிரித்து

 

ஆறு அடுக்கு நேமி ஏறி ஆறு உடுத்து நாதனைத்

தீர் அணைத்து நீ மணக்க மூலமான உந்து நீ

ஏறு அடுக்கு நேரம் நின்ற சிக்கலான மும்முடி 

சீர் அமைக்க கட்டு அவிழ்க்க மூலம் ஆன ஆற்றல் நீ

நூறு அடுக்கு மாடி ஏறி உச்சி காணு வெற்றி போல் 

ஆறும் ஆறும் ஆகி நின்ற அந்தரத்தில் ஆழ்ந்து உ(ன்)னை

கூறு ஒடுக்கி கால் அடக்கி கன்னி உன்னை காணவும் 

கோது இ(ல்)லாத உன்றன் ஆற்றல் கூட நிற்க வேண்டுமே

 

To climb the six fold chakras and let you embrace and wed the Lord who wears Ganges (Shiva) the latent force is to be provided by you! When Kundalini Shakti climbs the chakras, the 3 knots she meets on the way are also need to be removed by the primal force that is you, and those who feel they have achieved the summit of climbing 100s of stories and have a vision of you in cosmic embrace with Shiva at the Dvadashanthara by controlling their senses and Prana, too cannot do so without you as their force always standing by them oh ParaShakti!

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்