மாமாயை யன்னையாய் மாமாய னம்மானாய்த் தீமாயக் காமனைச் செய்தவன் றந்தையாய் நாமாய நின்றகந்த னாமங்க ளுள்வதே நாமாய நல்ல வழி
மா மாயை அன்னையாய் மா மாயன் அம்மானாய்த்
தீ மாயக் காமனைச் செய்தவன் தந்தையாய்
நாம் ஆய நின்ற கந்தன் நாமங்கள் உள்வதே
நா மாய நல்ல வழி
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக