சித்தனாக வித்தனாக முத்தனாக வேண்டுவோர்
பத்திமார்க ஞானமார்க கர்ம்மார்க கொண்டுளோ
ரெத்தவங்க ளாளநிற்கு முத்தமர்கண் மேன்மையர்
சத்தியங்க டத்துவங்கள் சாற்றிநின்ற வுன்னதர்
தொத்திநின்ற வூழறுக்கு முத்திதேடு மார்வலர்
வித்திலாத வித்தைதேடு தத்துவர்கள் யோகிகண்
முத்துமாரி யாகிநின்ற மூலமான வுன்னையே
யத்தனாக வம்மையாக வாசனாக யெண்வரே
சித்தனாக வித்தனாக முத்தனாக வேண்டுவோர்
பத்தி மார்கம் ஞான மார்கம் கர்மமார்கம் கொண்டு உள்ளோர்
எத் தவங்கள் ஆள நிற்கும் உத்தமர்கள் மேன்மையர்
சத்தியங்கள் தத்துவங்கள் சாற்றி நின்ற உன்னதர்
தொத்தி நின்ற ஊழ் அறுக்கும் உத்தி தேடும் ஆர்வலர்
வித்து இ(ல்)லாத வித்தை தேடு தத்துவர்கள் யோகிகள்
முத்து மாரி ஆகி நின்ற மூலமான உன்னையே
அத்தனாக அம்மையாக ஆசானாக எண்வரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக