செவ்வாய், 22 ஏப்ரல், 2025

நீரகத்தின் கலி விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

நீரகத்தி னாரணர்க்கு நன்கமைந்த மருகநீ
போரகத்திற் புன்சிரித் திகலழிக்கும் புங்கவ
பாரகத்தி னான்குநின்ற பாங்குடைத்த வூர்திரு
வேரகத்தி லீசருக்கும் பொருளுரைத்த பாலனே  

நீர் அகத்தின் நாரணர்க்கு நன்கு அமைந்த மருக நீ

போர் அகத்தில் புன் சிரித்து இகல் அழிக்கும் புங்கவ

பார் அகத்தின் நான்கு நின்ற பாங்கு உடைத்த ஊர் திரு

ஏரகத்தில் ஈசருக்கும் பொருள் உரைத்த பாலனே 

 

படம்


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி