தாதை துதித்தத்தி தீதுதத்துத் தேதுதித்த
தூதீத்தத் தேதே துதித்தது - தேதே
திதத்தாதோ தத்தித்தா தீத்தே துதித்த
துதித்தேத்து தூதாதீ தோ
தாதை துதித்து அத்தி தீது தத்துத் தேது(சு) உதித்த
தூ தீ(ர்)த்தத்து ஏது ஏது உதித்தது ? தே தே
திதத் தா தோது அத்தித் தா தீத் தேது(சு) உதித்த
துதித்து ஏத்து தூ தாது ஈதோ ?
அனைவருக்கும் தகப்னான சிவபெருமானைத் துதித்து அத்தி (ஐராவதம்) தனது தீதைத் (சாபத்தைத்) தத்து (நீக்கி) தேசு உதித்த (கருமை நிறம் போக, பழய படி தனது பிரகாசமான வெள்ளை நிறம் மீள் பெற) ஏதுவாக இருந்த இந்தத் தூய்மையான தீர்த்தமான (தலமான) தாராசுரம் எவ்வாறு உதித்தது? (யாம் அறியோம்)
அவ்வாறே இச்சிற்பத்திற் காண்பது தேவர்களுக்கெல்லாம் தேவரான மஹாதேவரைத் திரமாகத் தாங்கும் முதுகோ ?(இது காளையோ?) அல்லது ஒரு வகையாக ஏற்றபடி (தோதாக) பார்த்தால் இது ஒரு யானையின் முதுகோ? தீயின் ஒளியில் உண்டான துதிக்கத் தக்க தூய பொருள் இதுவோ? என்னே இச்சிற்பக் கலையின் அழகு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக