துகளென் றிருந்துஞ் சுடர்வேல னம்மை
யகலா திருப்பா னணைத்துச் - சிகியேறு
சண்முக னன்பின் றலைவடிவ னாறதோ
பெண்முகங் கொண்ட பிரான்
சீர் பிரித்து :-
துகள் என்று இருந்தும் சுடர் வேலன் நம்மை
அகலாது இருப்பான் அணைத்து சிகி ஏறு
சண்முகன் அன்பின் தலை வடிவன் ஆறு அதோ
பெண் முகம் கொண்ட பிரான்
பொருள்:-
நாம், நம்மைத் துகள் போன்று ஒரு பொருட்டல்ல என்று எண்ணினாலும், சுடர்வேலற்கு அஃது அவ்வாறன்று. சிகியாகிய மயிலேறு சண்முகன் , அன்பின் தலை வடிவங்கொண்டவன் என்பதால் அதுவுமன்றி அவனது ஆறாவது முகம் தனது தாயாகிய சக்தியின் அதோமுகமென்பதால் அப்பிரான் நம்மை எப்போதும் அணைத்தவாறு அகலாது இருப்பான்!
We might consider ourselves to be as insignificant as dust, though that maybe true from our point of view, it is not the case from the view point of Skandha! Shanmukha who mounts the peacock is a personification of love and care, his sixth face is that of his mom Parasakthi's Atho Mukha, so he always remains with us without fail in embrace such is his love!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக