சக்கரத் தாற்றலை கொண்டாய்ச் சபையிற் சிசுபாலனின்
சக்கரத் தாற்றலைக் கொண்டாய் நகத்தி னரசிம்மத
சக்கரத் தாற்றலை கொண்டாய்ச் சரணா ரவிந்தமாவா
சக்கரத் தாற்றலை கொண்டா யெமக்குக் கதிதரவே
சக்கரத்தால் தலை கொண்டாய் சபையில் சிசுபாலனின்
சக்கரத்து ஆற்றலைக் கொண்டாய் நகத்தில் நரசிம்ம!
தசக் கரத்து ஆற்று அலை கொண்டாய் சரணாரவிந்தம் மா வாசு
அக்கரத்தால் தலை கொண்டாய் எமக்கு கதி தரவே !
கண்ணனாக சபையில் சிசுபாலனின் தலையைக் கொண்டாய், நரசிம்ம அவதாரத்தில் சக்கரத்தின் ஆற்றலை உனது நகத்தினில் கொண்டாய், தசக் கரனான சிவபெருமானின் சிரசில் விளங்கக் கூடிய கடலைப் போல் சீற்றம் கொண்ட கங்கை ஆற்றினை உனது தாமரைப் பாதங்களில் கொண்டாய் வாமனனாக, திருமகள் வாசம் செய்யும் அழிவற்ற உனது திருநாமத்தால் பெரிய பிராட்டியின் அளவற்ற கருணையினால் எமக்குக் கதி தரும் செயலைத் தலையாய் கொண்டனையே!
You took the head of Sishupala in the Courtroom with your sudarshana chakra, in your avatara as Narasimma the power of the Chakra was embodied in your nails, you graced the ferocious river Ganges which adorns the head of Lord Shiva with your feet in your Vamana Avatara, Oh Sriman Narayana, because of the everlasting power of your name and due to the grace of Goddess Sri, you take it up as your responsibility to grant us the highest abode!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக