வில்லிறுத்து வைதேகி கரம்பிடித்தாய்
மெய்வருத்தி வெங்கானந் திரிந்துவந்தாய்ச்
சொல்லிருத்த வேந்தனது பாடுபட்டாய்
சூழ்நிலைக் கயர்வதுபோல் வேடமிட்டாய்க்
கல்லொருத்தி பெண்ணாகக் கால்பதித்தாய்க்
கண்ணறுத்துப் புன்காகத் தடைவளித்தாய்க்
கல்லிருத்தி வழிசமைத்துத் தீவடைந்தாய்க்
கணைதொடுத் தசுரன்றலை பத்திறிந்தாய்
வில் இறுத்து வைதேகி கரம் பிடித்தாய்
மெய் வருத்தி வெம் கானம் திரிந்து உவந்தாய்
சொல் இருத்த வேந்தனது பாடு பட்டாய்
சூழ் நிலைக்கு அயர்வது போல் வேடம் இட்டாய்
கல் ஒருத்தி பெண் ஆகக் கால் பதித்தாய்
கண் அறுத்துப் புன் காகத்து அடைவு அளித்தாய்
கல் இருத்தி வழி சமைத்து தீவு அடைந்தாய்
கணை தொடுத்து அசுரன் தலை பத்து இறிந்தாய்
You broke the bow and won the hand of vaidehi, you endured hardships to roam around in the dangerous woods, to keep the king's word you took lot of pains, you played a role as a human as though you were affected by the circumstances! You made the stone back into Ahalya, you saved kakasuras life by only taking away his eye, you created a bridge by piling up stones and reached the island and with one arrow destroyed the ten heads of Ravana!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக