குறைவொன்று மில்லாத கோவிந்தா
நிரைகாக்குங் கொடைவள்ளல் கோபாலா
சிறைவென்ற வசுதேவன் றிருமகனே
திருவாழுந் திருமார்ப ஸ்ரீதரனே
நிறைகொன்ற பார்த்தனுக்குச் சாரதிநீ
நிறைகின்ற கருவண்ணச் சுந்தரனே
குறைகின்ற கயிறுக்கும் பணிவாயே
குணவதியின் மைந்தாதா மோதரனே
பொருள்:-
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தன் நீ, ஆநிரைகளைக் காத்தருளும் கொடை வள்ளலான கோபாலன் நீ, சிறைவென்ற வசுதேவனின் புத்திரனான வாசுதேவன் நீ, திருமகள் குடியிருக்கும் மார்பனான ஸ்ரீதரன் நீ, நிறையாய் நின்ற கௌரவப் படையைக் கொன்ற பார்த்தனின் சாரதி நீ, ஆழ்ந்த கறுநீல வண்ணங் கொண்ட ஷ்யாம சுந்தரன் நீ, நீ அன்புக்கு மட்டுமே பணியும் தன்மை கொண்டவன் என்பதால் ஒரு சிறு கயிறுக்கும் பணிந்தாய் உன் அன்னையான குணவதி அசோதையிடம் தாமோதரா!
Oh faultless Govinda, the protector of cows and granter of boons Gopala, Son of Vasudeva who escaped prison, Bearer of Lakshmi in your heart Sridhara, you are the charioteer to the scorcher of foes Arjuna, you are of a deep black hue Shyama Sundara, you bow down to love and agree to be even bound by a small rope, oh Damodara! son of the virtuous Yashodha!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக