ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

விண்டிறக்க கலி விருத்தம்

விண்டிறக்க வேண்டிநிற்க வீணரென்று தூற்றுவார் விண்டிறக்க சமயந்தன்னை வேறுவேறு கூவுவார் கண்டிறக்க மாந்தநேய மென்பதென்ன வாகுமோ கண்டிறக்க வேண்டுமின்று கடினமான நேரமே

 

 

விண் திறக்க வேண்டி நிற்க வீணர் என்று தூற்றுவார் விண்டு இறக்க சமயம் தன்னை வேறுவேறு கூவுவார் கண்டு இறக்க மாந்த நேயம் என்பது என்ன ஆகுமோ கண் திறக்க வேண்டும் இன்று கடினம் ஆன நேரமே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி