கருணைக் குருவகங் காமாட்சி கண்களே
கருணைக் குருவகங் காமாட்சி கண்களே
கருணைக் குருவகங் காமாட்சி கண்களே
கருணைக் குருவகங் காமாட்சி கண்களே
சீர் பிரித்து
கருணைக்கு உரு அகம் கா மாட்சி கண்கள் ஏ(ங்)கு
அருணைக்கு உரு அகம் கா மாட்சி கண் கள் ஏகு
அருணைக் குருவ கங்கா மாட்சி கண்கள் ஏ
கருணைக்கு உருவகம் காமாட்சி கண்களே !
பொருள்
கருணைக்கு ஒரு உரு கொடுத்து அதன் அகம்/ மனம் சோலைகளைப் போன்ற பெருமை உடையாதாக இருக்குமானால், அது கண்கள் ஏங்கித் தவிக்கும் அருணைக்கு உரு அகம் காக்கும் மாட்சிகண் (திருவண்ணாமலை என்னும் பதியின் கண் உதித்த) தேன் போன்ற கவிமழை பொழிந்த (எமது) அருணைக் குரு(அருணகிரினாதர்) அவர்தம் கண்கள் எப்போதும் கங்கையின் பெருமையான முருகனிடமே இருந்தாலும், அதற்கும் மூலமாக இருப்பது யாரென்றால் கருணைக்கு உருவகம் ஆன காமாட்சி தேவியின் கண்களேயாம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக