ஞாயிறு, 11 மே, 2025

துண்பிளந்த கலி விருத்தம்

 

தூண்பிளந்த சீயமாக பாலனுற்ற துயரினை
யூண்மகிழ்ந்து பொன்னன்சிந்து முதிரமுறிஞ்சு பெற்றியோய்
நாண்மலர்ந்த வலர்கடூவி நாளுமுன்னை யேத்தவே
யூன்பிளந்த வுகிரவாழி யுண்மைபத்தர்க் காக்குமே
சீர்பிரித்து
தூண் பிளந்த சீயம் ஆக பாலன் உற்ற துயரினை
ஊண் மகிழ்ந்து பொன்னன் சிந்தும் உதிரம் உறிஞ்சு பெற்றியோய்
நாள் மலர்ந்த அலர்கள் தூவி நாளும் உன்னை ஏத்தவே
ஊன் பிளந்த உகிர ஆழி உண்மை பத்தர்க் காக்குமே
பொருள்:-
பாலனான பிரகலாதன் உற்ற துயரினை இரணியனை உண்ணும் உணவாகக் கொண்டு அவன் இரத்தத்தை உறிஞ்சும் செயலால் தீர்த்த பெருமைக் குரிய தூண் பிளந்து வந்த சீயமே நரசிம்ம! உன்னை நாள் மலர்களால் தூவி பூசிக்க, இரணியன் ஊனைப் பிளந்த உனது நகம் என்னும் திருவாழி உண்மை பத்தர்களை என்றும் காக்கும்!
பொன்னன்- இரணியன்
To destroy the grief of Prahlada you incarnated as Narasimha, breaking the pillar and consuming a
Hiranya Kashipu’s blood. Praying to you everyday with freshly blossomed flowers your nails / Sudarshana Chakra that tore open the flesh of Hiranyakadhipu would always protect true devotees!
 
No photo description available. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி