செவ்வாய், 27 மே, 2025

ஞானிக்கும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

ஞானிக்கு மோனிக்கு நாதற்கு மாந்தர்க்கும்
வானிற்குந் தேவர்க்கும் வாழ்வளிக்குந்- தேனிற்கு
நாவுடைத்த தேவிக்கு நாத மொழியுளதே
பாவெடுத்துப் போற்ற வுனை 



ஞானிக்கும் மோனிக்கும் நாதற்கும் மாந்தர்க்கும்

வான் நிற்கும் தேவர்க்கும் வாழ்வு அளிக்கும் தேன் நிற்கும்

நா உடைத்த தேவிக்கு நாத! மொழி உ(ள்)ளதே

பா எடுத்துப் போற்ற உனை 

 

படம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி