செவ்வாய், 27 மே, 2025

வேண்டுதல் கலித்துறை

வேண்டுதல் வேண்டேன் விழைவரிய வேண்டாமை வேண்டேன்
றோண்டுதல் வேண்டேன் றுயரகல மீண்டெழல் வேண்டேன்
றூண்டுதல் வேண்டேன் சுருதிதம தாளுமை வேண்டேன்
றாண்டுதல் வேண்டேன் றனிமுருக னாமமென் மாண்பே

 

 சீர் பிரித்து:-

வேண்டுதல் வேண்டேன் விழைவு அரிய வேண்டாமை வேண்டேன்
தோண்டுதல் வேண்டேன் துயர் அகல மீண்டு எழல் வேண்டேன்
தூண்டுதல் வேண்டேன் சுருதி தமது ஆளுமை வேண்டேன்
தாண்டுதல் வேண்டேன் தனி முருகன் நாமம் என் மாண்பே

 

பொருள்:-

வேண்டுதலும் விழைவதற்கரிய வேண்டாமையும் ஆராய்தலும் (தோண்டுதலும்) துயரினின்று அகன்று மீண்டு எழுதலும்,சுருதிகளின் ஆளுமையும், அதற்குத் தூண்டுதலாக இருப்பனவையும் வேண்டேன், ஒப்பற்ற முருகன்றன் நாமமே எனது மாண்பு என்பதனால் அதை நான் என்றும் கடக்க வேண்டேன்!

 

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி