மழலையாளு முறுவலாழ மறைந்துபோகுஞ் சோகமாய்
மனதைவாட்டு மிடர்கள்யாவு மாய்ந்துபோக நின்றிடு
நிழலிலாத வெயிலில்வாடு நிலையிலாத பயணிக
ணிகரிலாத சுனையைநாடி நிறைவடையு மாறுபோ
றொழிலில்வாடுந் துணிவில்வாடு மகவில்வாடு மாந்தர்க
டுரிதமீண்டு நிலையைநாட வழியமைக்கு மாறதாய்ப்
பொழில்கள்சூழ்ந்த பூவின்பாறை புன்னகைத்து வாழ்ந்திடுங்
குழந்தைவேலன் காத்திருக்கக் குறைகளேது நாடுமோ
சீர் பிரித்து:-
மழலை ஆளும் முறுவல் ஆழ மறைந்து போகும் சோகமாய்
மனதை வாட்டும் இடர்கள் யாவும் மாய்ந்து போக நின்றிடும்
நிழல் இ(ல்)லாத வெயிலில் வாடு நிலையிலாத பயணிகள்
நிகர் இ(ல்)லாத சுனையை நாடி நிறைவடையும் ஆறு போல்
தொழிலில் வாடும் துணிவு இல் வாடும் மகவு இல் வாடும் மாந்தர்கள்
துரிதம் மீண்டு நிலையை நாட வழியமைக்கும் ஆறு அதாய்ப்
பொழில்கள் சூழ்ந்த பூவின் பாறை புன்னகைத்து வாழ்ந்திடும்
குழந்தை வேலன் காத்திருக்கக் குறைகள் ஏதும் நாடுமோ
பொருள்:-
மழலைகள் ஆளும் முறுவல் மிக்க மகிமை கொண்டது, அதனை நோக்கும் போது நமது மனதில் உள்ள வாட்டங்கள் யாவும் மாய்ந்து போகும். பயணிகள் தமது பயணத்தின் போது வெயிலில் மிக அவதிப் பட்டு நிழற்குத் தேடி நிற்கும் போது அங்கு சுனை தென்பட்டால் அது பயணத்தின் களிப்பை அகற்றி நிறைவை அளிக்கும், அவ்வாறே தொழில் சிக்கல்களுக்காகவும், துணிவு இன்மையால் ஏற்படும் சிக்கல்களுக்காகவும், மகவு இன்மையில் ஏற்படும் நோவிற்கும் உடனடியாக சிக்கல்களை எல்லாம் களைந்து வழி அமைத்துக் கொடுக்கும் போக்காக உள்ளான் பொழில்கள் சூழ்ந்த பூம்பாறையில் குழந்தை வடிவில் குழந்தை வேலப்பராக முருகன், அவன் நம்மை என்றும் காத்து நிற்க நமக்கு எந்தக் குறை வந்து வருத்தந்தரும் ?
When one sees the smile of a child, he forgets all the worries in the world that trouble his heart, when a weary traveler who travels in scorching sun without respite, sees a beautiful water body that gives him much needed coolness he becomes fulfilled, similarly people who are suffering as a result of their work, lack of courage / fight with enemies and the absence of progeny and so on, get all their wishes fulfilled by the child (kuzahndhai vElappar) who sports a beautiful smile living in the place called poombarai with lot of water bodies. When such a child (Murugan) who showers his grace and grants all wishes and remains a path maker to one and all, is there any unfulfilled wants in our life? (of course not!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக