பதினாறு கலையு மானவளே
பதியடைய பாதை யானவளே
விதிநால்வர்க் கன்னை யானவளே
விழைவார்க்கு வெல்லம் போன்றவளே
நிதியாள்வட் கருளை யீந்தவளே
நிசவாக்கி னீங்கா நிற்பவளே
துதியாண்மை தூய்மை யீந்தவளே
சுகமாளுந் தாயே காமாட்சீ
சீர் பிரித்து :-
பதினாறு கலையும் ஆனவளே பதி அடைய பாதை ஆனவளே
விதி நால்வர்க்கு அன்னை ஆனவளே விழைவார்க்கு வெல்லம் போன்றவளே
நிதியாள்வள் கு அருளை ஈந்தவளே நிச வாக்கின் நீங்கா நிற்பவளே
துதி ஆண்மை தூய்மை ஈந்தவளே சுகம் ஆளும் தாயே காமாட்சீ
பதினாறு கலையும் (ஶோடசி) ஆனவள் நீ, பதியை அடைய பாதையும் நீயே தான், நான்முகன் முதலிய ஐவர்க்கும் தாயானவள் நீ தான், உன்னையே விரும்புவார்க்கு நீ என்றும் திகட்டா இனிப்பின் சுவை, நிதிக்கிறைவியான திருமகளுக்கு அருள் தந்தவள் நீ, சத்தியத்தில் என்றும் நீங்கா நிற்பவள் நீ, உன்னைத் துதிக்க தூய்மையும் ஆளுமையும் தந்தவளும் நீயே தான் அம்மா சுகத்தை ஆளும் காமாக்ஷி
You are the form of sixteen kalas, you are the path to attain Pathi(Lord Shiva), you are the mother of Trimurthis, Maheswara and SadaShiva, you unending sweetness to your devotees, you graced Mahalakshmi and you are the unmistakable form of Satya/Truth, You granted me the purity and ability to sing your praises Oh Mother Kamakshi!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக