வியாழன், 12 ஜூன், 2025

என்றுமாய்கை கலிவிருத்தம்

என்றுமாய்கை யென்றவுண்மை யாரறிந்த ரகசியம்
வென்றிவாழ்வி னோக்கமென்று வீணடைந்த வெறுமையா
மன்றிலாடு நாதர்பாத மம்மைபாதந் தொழுவதே
நன்றுவாழ வாறதென்றன் குன்றிலாடுங் கந்தனே

 

 சீர் பிரித்து 

 என்று மாய்கை என்ற உண்மை யார் அறிந்த ரகசியம்

வென்றி வாழ்வின் நோக்கம் என்று வீண் அடைந்த வெறுமையாம்

மன்றில் ஆடும் நாதர் பாதம் அம்மை பாதம் தொழுவதே

நன்று வாழ ஆறு அது என்ற(றா)ன் குன்றில் ஆடும் கந்தனே      

 

பொருள்  

இவ்வாழ்வில் நமது இறுதி நாள் என்றென்ற இரகசியத்தை  யார் அறிவார் ?      

வெற்றி ஒன்றே வாழ்வின் இலக்காகக் கொண்டு வீணே பயணிக்கின்றோம், இது வெறுமையிலன்றோ போய் முடியும்

ஆதலால், மன்றில் ஆடும் சிவபெருமானுடைய பாதமும் அன்னை பராசத்தியின் பாதமும் தொழுவதே நன்று வாழ்வதற்கான வழி என்றுரைத்தான் குருநாதனான குன்றுதோரும் ஆடும் கந்தப் பெருமான்!             

 

Who knows when our last moment in this life is? We move about our lives only in the thoughts of material success and rarely think of anything else, this would ultimately lead to a situation of emptiness. So, the way to right living as prescribed by the Guru Tatva of Skanda who sports all hilly places is to worship the holy feet of Lord Nataraja and ParaShakti!                   

 

The Amazing Iconography of Shiva as Somaskanda Murti                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி