திங்கள், 30 ஜூன், 2025

கறைகொண்ட மணிமாலை விருத்தம்

கறைகொண்ட கண்டன் கனல்வந்த நந்த 

கரைவந்தொ டுங்க வழியே 

மறைகண்ட விந்தை மறவள்ளி கந்த 

மதிவந்தொ டுங்கு மிடமே 

மறைவிண்ட கஞ்சற் சிறைகொண்ட பிஞ்சே 

மதிகொன்றை சூடி குருவே

குறைகொண்ட வென்னை நிறைகொண்ட மன்ன 

தமிழ்கொண்டு ரைப்ப னுனையே

 

தனனான தான தனனான தான 

தனனான தான தனனா  

 

 

சீர் பிரித்து:-

கறை கொண்ட கண்டன் கனல் வந்த நந்த! 

கரை வந்து ஒடுங்க வழியே

மறை கண்ட விந்தை! மற வள்ளி கந்த 

மதி வந்து ஒடுங்கும் இடமே

மறை விண்ட கஞ்சன் சிறை கொண்ட பிஞ்சே!

மதி கொன்றை சூடி குருவே!

குறை கொண்ட என்னை நிறை கொண்ட மன்ன!

தமிழ் கொண்டு உரைப்பன் உனையே!

 

பொழிப்பு:- 

கறை கொண்ட மிடற்றனான சிவ பெருமானின் நெருப்பினின்று உதித்த மைந்தனே, ஆக்கள் கரை கண்டு ஒதுங்குவதற்கு வழியாய்த் திகழ்பவனே 

நான் மறைகள் போற்றும் விந்தையே, மறச்சிறுமி வள்ளி தேவியின் நாயகனான கந்தனே மனதெல்லாம் வந்து ஒடுங்கும் இடமாய்த் திகழ்பவனே

நான்மறைகள் ஒலித்து படைப்புத் தொழிலைப் புரியும் பிரமனைச் சிறை கொண்ட இளங்குழந்தையே மதி கொன்றை சூடும் சிவபெருமானுக்கும் குருவானவனே!

குறை கொண்ட இச்சிறியேனையும் நிறை கொண்ட ஆட்கொண்டனை என் மன்னா! அதற்கு ஏதும் கைம்மாறு செய்யத் தகாது என்றாலும் நான் உன்னையே தமிழ் கொண்டு என்றும் போற்றுவேன்! 

You arose from third eye of Neelakanta oh Son of Lord Shiva, you are the refuge of all Jivas,

The 4 Vedas praise your excellence and you are the Lord of huntress Devi VaLLi, you are end point of all mental and intellectual understanding and are truly beyond it!

The creator Lord Brahma who sings the Vedas and does his creation was imprisoned by you oh young child! You are also the Guru of Lord Shiva who has moon and KonRai flower adorned on his matted locks.

Despite being replete with flaws, you graced and took control of me oh Lord, for which, even though I can't do anything in return, within my ability I will keep singing your praises in Thamizh!

 

படம் 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி