ஞாயிறு, 29 ஜூன், 2025

ஆதி மூலவன் மத்தகோகிலச் சந்த விருத்தம்

 ஆதி மூலவ னாழி மாதவ 

        னானை காத்தவ                                             னன்பைமா

வாதி லாயுத மேந்த வில்லையென் 

     றேற்ற சூளுரை                                           பொய்த்தவீண்

சூதிலாடவர் தோற்றமாதுள 

       மெண்ண வக்கண                                               நின்றகூ

றாது போயினு மூது வேய்ங்குழ 

      னாத னுக்கது                                                        லீலையே  

 

 

சீர் பிரித்து 

ஆதி மூலவன் ஆழி மாதவன் ஆனை காத்தவன் அன்பை 

மா வாதில் ஆயுதம் ஏந்த வில்லை என்று ஏற்ற சூளுரை பொய்த்த

வீண் சூதில் ஆடவர் தோற்ற மாது உளம் எண்ண அக் கணம் நின்ற 

கூறாது போயினும் ஊது வேய்ங்குழல் நாதனுக்கு அது லீலையே ! 

 

பொருள்

மா வாதில் ஆயுதம் ஏந்த வில்லை என்று ஏற்ற சூளுரையைப் பொய்த்த, - மஹாபாரதப் போரில் தான் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று செய்த சத்தியத்தை பொய்த்தவுனுமான 

வீண் சூதில்  ஆடவர் தோற்ற மாது உளம் எண்ண அக் கணம் நின்ற - வீண் சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்ற பாஞ்சாலி எண்ணிய மாத்திரத்தில் அக் கணம் அங்கு வந்து காத்தவுனுமான

ஆதிமூலவன், ஆழி மாதவன் , ஆனை காத்தவன் அன்பை - ஆதி மூலவன் ஆழியைத் தன் கையில் ஏந்திக் கொண்டிருக்கும் மாதவன், கஜேந்திரனைக் காத்தவன் ஸ்ரீமன் நாரயணன்றன் அன்பை (நாம்)

கூறாது போயினும் ஊது வேய்ங்குழல் நாதனுக்கு அது லீலையே - அவன் கருணையை நாம் கூறி விரிக்காது போயினும், அது குழலூதும் நாதனான கண்ணனுக்கு ஒரு பொருட்டே அல்ல, அவன் அதை லீலை மாத்திரமாகவே நம்மேல் அன்பு செலுத்துகிறான்! அவன் எதிர்பார்ப்பதில்லை, என்றாலும் நான் தான் அவனது அன்பின் வடிவான செயல்களைக் கூறி மகிழ வேண்டும் என்பதாம்  

  

He who fell back on his promise of not lifting a weapon during the war of Mahabharatha to save his devotee's promise, he who saved Draupadi who was lost in a game of dice by her legendary warrior husbands, the pandavas just at the behest of a thought, that cause of everything, (the ChakraDari) he who holds the discus who saved Gajendra at the call of distress, that Parabrahma's love is immeasurable, and even if we don't sing his praises it has no big effect on him as he showers his love and grace as part of his leela only! Nevertheless it is up to us to keep contemplating on his qualities one of which is to shower his love on us for our own upliftment! 

படம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி