ஞாயிறு, 6 ஜூலை, 2025

பெண்ணாளும் வெண்பா

பெண்ணாளும் புங்கவனைப் பண்ணாண்டுப் பாடாது
கொண்ணாளுங் கூற்றற் கிலக்காமே - யண்ணா 
மலையானே யேறூரு மாதேவா வெற்புச்
சிலையானே செய்யவனே யென்று

 

பெண் ஆளும் புங்கவனைப் பண் ஆண்டுப் பாடாது

கொள் நாளும் கூற்றற்கு இலக்கு ஆமே அண்ணா

மலையானே ஏறு ஊரும் மாதேவா வெற்புச்

சிலையானே செய்யவனே என்று  

 

அண்ணா மலையானே ஏறு ஊரும் மாதேவா வெற்புச் சிலையானே செய்யவனே என்று பெண் ஆளும் புங்கவனைப் பண் ஆண்டுப் பாடாது கொள்(ளும்) நாளும் கூற்றவனுக்கு இலக்கு என்று ஆகுமே!

Days that are not spent in calling out Shiva who has Shakti as his part, as one who stands as the ThiruvaNNa malai mountain, one who has Nandi as his mount, Mahadeva and one who has the Meru as his bow, Shiva or Ruddy complexioned one and the one who is personified as excellence, become a target for Lord of Death Yama!

 

படம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி