செவ்வாய், 15 ஜூலை, 2025

மூன்று தேவி விருத்தம் (திருத்தங்கல்)

மூன்றுதேவி பக்கனின்ற மூலதேவன் மாதரு

ளான்றதேவி தேர்ந்தெடுக்க வன்றுவைத்த போட்டியி

னோன்றதேவி வென்றுநின்ற கோலவூரி தேதிரு

வேன்றதேவை யீடளிக்குந் திவ்யதேசந் தங்கலே 

 

 

சீர் பிரித்து:-

 

மூன்று தேவி பக்கல் நின்ற மூல தேவன் மாதர் உள்

ஆன்ற தேவி தேர்ந்து எடுக்க அன்று வைத்த போட்டியில் 

நோன்ற தேவி வென்று நின்ற கோல ஊர் இதே திரு

ஏன்ற தேவை ஈடு அளிக்கும் திவ்ய தேசம் தங்கலே

 

மூன்று (ஸ்ரீ,பூ,நீளா) தேவிமார்களைத் தன் பக்கலில் வைத்து நிற்கும் மூல தேவனான ஆன திருமாலின் மாதர்க்குள்  சிறந்தவள் யாரென்று தேர்ந்தெடுக்க முன்பொருநாள் நடந்த போட்டியில், தவம் நோற்ற (ஸ்ரீ) தேவி வென்று நின்ற கோலத்துடன் (செங்கமலத்தாயாராக) வீற்றிருக்கும், பத்தர்களைக் காக்கும் பொருட்டு அவர்களின் தேவைகளுக்கு ஈடளிக்கும் திவ்யதேசம் திருத்தங்கல் என்னும் இடமாம்! 

There was once a friendly competition between the Devis of the Lord (MahaVishnu) who is accompanied by three Devis (NeeLa, Bhu and Sri) as to who is the best among them. Sri Devi undertook a great penance and ended up marrying Narayana in the place called Thiruththangal where she sports a standing posture ,which is a Divya Desam that can grant the desires of devotees fully!

 

படம் 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி