செவ்வாய், 15 ஜூலை, 2025

நாடி வந்த துயர் சந்த விருத்தம்

 நாடி வந்த துயர் நோயி ழிந்த நிலை ஞான மந்த மடையா திர

 ஆடி வந்த மயி றேவி தந்த வயில் ஆளு கந்த னினைவா னிறை

 கூடி வந்த ணைய வேழ முந்தி வர கோல வள்ளி யமைகா தலன்

 தேடி வந்து நொடி போதி லன்பு மொழி சோதி புந்தி வழிசேர்ப் பனே

 

 சீர் பிரித்து

நாடி வந்த துயர் நோய் இழிந்த நிலை ஞான மந்தம் அடையாது இர ஆடி வந்த மயில் தேவி தந்த அயில் ஆளு கந்தன் நினைவால் நிறை கூடி வந்து அணைய வேழம் முந்தி வர கோல வள்ளியமை காதலன் தேடி வந்து நொடி போதில் அன்பு மொழி சோதி புந்தி வழி சேர்ப்பனே

 

தான தான தன தான தான தன

தான தான தன தா தன 

 

நம்மை நாடி வரும் துயரும் நோயால் இழிந்து போகும் நிலையும் ஞான மந்த நிலையும் அடையாமல் இருக்க 

மயில் மீது ஆடி வருபவனுமான, பராசக்தி தேவி தந்த அயிலையும் ஆள்பவனான, கந்தனை நினைவால் நிறைப்போமாக

அவ்வாறு செய்தால் 

வள்ளி தேவி கூடி வந்தணைக்க வேழம் முந்தி வந்து அச்சுறுத்துமாறு செய்த, அவர்தம் காதலனான முருகப் பெருமான்

நம்மைத் தானே தேடி வந்து நொடிப் பொழுதினில் அன்பு மொழியால் உபதேசிப்பான் நமது அகத்துள் அமரும் சோதியாய் இருந்து  

 

If we want to escape from the problems that we encounter in this world, the diseases and state of non wisdom all we have to do it, constantly fill our thoughts fully with the Lord of swaying peacock who carries the vEl (Lance) given to him by his mother Aadhi Para Shakti, if we do so

The Lord who sent an elephant (Vinayaka) to scare his lover Devi VaLLi into embracing him, Murugan will come of his own accord and whisper beautiful words/wisdom to us by shining as the light inside our mind! 

 

2 short stories - 1. Lord Vinayakar helps Lord Murugan | History 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி