வியாழன், 31 ஜூலை, 2025

கோஹம் விருத்தம்

கோகமென்று கேள்விகேட்டு வேகமேகி மாயைசூழ் மோக(ம்)வென்று மோனநின்று மூலவாதி யொன்றவே நாகமென்றி யாவுமற்று ஞானசோதி பணியலாம் சோகமென்றி யாவுமொன்ற வேகமென்ப துணரலாம்


கோஹம் என்று கேள்வி கேட்டு வேகம் ஏகி மாயை சூழ்

மோகம் வென்று மோனம் நின்று மூல ஆதி ஒன்றவே 

 நாஹம் என்று யாவும் அற்று ஞான சோதி பணியலாம் 

சோஹம் என்று யாவும் ஒன்ற ஏகம் என்பது உணரலாம்

 

பொருள்

கோ அஹம் என்று கேள்வி கேட்டு மாயை சூழ் மோகம் வேகம் ஏகி மோனம் நின்று ஆதி மூலத்தை ஒன்றவே, நா அஹம் என்று யாவும் அற்று ஞான சோதியை பணிந்து உணரலாம் அல்லது ச அஹம் என்று  யாவும் ஒன்றாய்க் கண்டு ஏகம் என்ற நிலையை உணரலாம் !

 

கோ அஹம் - நான் யார்? நா அஹம் - நான் என்பதில்லை, சோஹம் - அவனே/அவளே/அதுவே நான்   

 

By asking the question who am I? we can leave this clutches of Maya and by standing in silence and reach the source , by further negating that I am not anything and decimating the ego and achieving wisdom or understanding that I am that and accept everything and achieve the non dual singularity! 

 

படம் 

  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி