சனி, 12 ஜூலை, 2025

கண்டேன் சீதையை திருவிலங்கை வெண்பா

 திருவிலங்கை சென்று திருவிளங்கக் கண்டு

திருவிலங்கு மீண்டு திரும்பித் - திருவிலங்கை

கண்டுரைத்த சொல்லின் கவினுணர்ந்தா ராழ்வியப்பால்

விண்டுரைத்தல் விட்டார் மறந்து



திரு இலங்கை சென்று திரு விளங்கக் கண்டு திரு விலங்கு மீண்டு திரும்பித் திரு இலங்கு ஐ கண்டு உரைத்த சொல்லின் கவின் உணர்ந்தார் ஆழ் வியப்பால் விண்டு உரைத்தல் விட்டார் மறந்து

திரு விளஙகும் இலங்கைத் தீவிற்குச் சென்று திருமகளான சீதையைக் கண்டு திருவின் ஆசி பெற்ற விலங்கான ஆஞ்சநேயர் மீண்டு திரும்பித் திரு இலங்கும் தலைவனான இராமபிரானைக் கண்டு "கண்டேன் சீதையை" என்றுரைத்த சொல்லின் அழகை உணர்ந்து அனுபவித்தார் ஆழ்ந்து வியப்பால் மறு சொல் உரைக்கக் கூட மறந்து விட்டார்!

Having gone to the island of Lanka, and having got to see Devi Sita, the Vanara with complete grace of Sri got back and met The Lord who beams with Sri - Sri Rama, and uttered the words "I saw Sita" , those who are absorbed in the beauty of these words in the given sitauation become stupified and words fail them!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி