பூமாட்சி யென்பேன் புனன்மாட்சி யென்பேன் புனிதவள்பேர்
நாமாட்சி யென்பே னகைமாட்சி யென்பே னசைவடிவக்
காமாட்சி யென்பேன் கலைமாட்சி யென்பேன் கடைவிழியான்
மாமாட்சி யீவாண் மணிமாடக் கச்சி மலைமகளே
சீர் பிரித்து
பூ மாட்சி என்பேன் புனல் மாட்சி என்பேன் புனிதவள் பேர்
நா மாட்சி என்பேன் நகை மாட்சி என்பேன் நசைவடிவக்
காமாட்சி என்பேன் கலை மாட்சி என்பேன் கடை விழியால்
மா மாட்சி ஈவாள் மணிமாடக் கச்சி மலை மகளே
பூவலிகின் பெருமை என்பேன், புனித தீர்த்தம் பெருமை என்பேன், புனிதவளின் பெயர் நாவுக்குப் பெருமை தரும் என்பேன், ஆசை வடிவுடையவள் காமாட்சி என்பேன் கலையின் தாய் என்பேன் கடைக்கண்களால் மிகப் பெரும் பெருமை தன் அடியர்களுக்கு வழங்கும் மணிமாடங்கள் சூழ்ந்த கச்சி மாநகர மலை மகள் ஆகிய தாயவள் என்றே போற்றுவேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக