பண்டுபோரி னச்சமுற்ற பாலவேட மேற்றுநீ கண்டிறந்தெ ரிக்கவைத்தி கண்வளர்ந்த மாந்தனை யெண்டிறங்க ளாதியாயு மேயவோடி லீலைசெய் உண்டமண்ணை யண்டமாக்கு மாயவாய வாயனே
பண்டு போரின் அச்சம் உற்ற பால வேடம் ஏற்று நீ
கண் திறந்து எரிக்க வைத்தி கண் வளர்ந்த மாந்தனை
எண் திறங்கள் ஆதி ஆயும் ஏய ஓடு இலீலை செய்
உண்ட மண்ணை அண்டம் ஆக்கும் மாய வாய ஆயனே!
பண்டொரு காலத்தில் போரின் அச்சமுற்றார்போல் வேடமிட்டு நீ ஓடினாய், அதனூடாக காலாயவனனை முசுகுந்தனார் தூங்கும் குகைக்கு இட்டுச் சென்று அவனை எரிக்கும் படியாக உறங்கிக் கொண்டிருக்கும் அவரை கண் திறக்க வைத்து எரித்தாய்! எண்ணக்கூடிய (அதற்கும் அப்பாற்பட்டும் உள்ள) அனைத்து திறன்களும் உன்னிடமிருந்தே வருகின்றன, என்றாலும் நீ ஒன்றும் அறியாப் பிள்ளையைப் போல அமரின் நடுவே ஓடியது உன் லீலையின் பொருட்டேயாம், உண்ட மண்ணைக் கூட பல அண்டங்களாக விரிக்கும் மாய வாயை உடைய ஆயனே!
Once, you acted as being afraid and fled the battlefield, in order to lead your foe (Kaalayavana) to his demise by leading him to the cave in which Muchukunda was sleeping and, on whose waking up was burned to ashes! You are the source of all known skills, yet you playfully pose as running away due to your Leela Oh Cowherd who has the magical mouth of turning the sand consumed into several universes!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக