புதன், 20 ஆகஸ்ட், 2025

வேடவேங்கை விருத்தம்

 

வேடவேங்கை விருத்தனான வேட்டுவச்சி வேட்டுவன் ஆடுபுள்ளொ டானையேறு மர்த்தநாரி யாண்மகன் கோடுடைத்து வ்யாசர்சொல்லப் பாரதத்தை வெற்பிலன் றேடியற்று மேகதந்த னின்பமீந்த விளையனே
 
 
 வேட(ன்) வேங்கை விருத்தன் ஆன வேட்டுவச்சி வேட்டுவன் ஆடு புள்ளொடு ஆனை ஏறும் அர்த்த நாரி ஆண் மகன் கோடு உடைத்து வ்யாசர் சொல்ல பாரதத்தை வெற்பில் அன்று ஏடு இயற்றும் ஏக தந்தன் இன்பம் ஈந்த இளையனே
 
வேடனாகவும் வேங்கை மரமாகவும் விருத்தனாகவும் வேடமிட்டு வேட்டுவச்சியான வள்ளியம்மையை விழைபவன், ஆடு மயில் யானை என்ற மூன்று வாகனங்களை உடையவன் சிவசக்தியின் ஆண் தன்மை மிக்க மகனாம், தனது தந்தத்தை உடைத்து எழுதுகோலாக ஆக்கி மஹாபாரதத்தை மேரு வெற்பில் முன்னொரு காலத்தில் ஏட்டில் இயற்றிய ஏக தந்தனான விநாயகர் உனது மணமுடிக்க உதிவினான் , அவனது இளையவன் நீ முருகா !
 
You  took the forms of hunter, vEngkai tree, old man when you desired the huntress vaLLi, you sport Goat,Peacock and elephant as your vehicle, oh son of Shiva Shakti with masculine principle, Lord Ganesha broke his tusk using it as his pen and wrote Mahabaratha in mount Meru as Vyasa maharishi narrated it, he helped you in your marriage with vaLLi and you are his younger brother Oh Muruga!
 
 
படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி