சடைவளர்த்துத் தாடிவைக்கத் தவஞ்சிறக்கக் கூடுமோ கொடைவளர்த்துத் தானஞ்செய்யக் கடவுள்ஞானஞ் கூடுமோ படைவளர்த்துப் பகைசெறுக்கப் பழவினைஇக டீருமோ தொடையமர்த்திக் குடர்களைந்த வடிவடைந்துய் நெஞ்சமே
சீர் பிரித்து:-
சடை வளர்த்து தாடி வைக்க தவம் சிறக்க கூடுமோ? கொடை வளர்த்து தானம் செய்ய கடவுள் ஞானம் கூடுமோ? படை வளர்த்து பகை செறுக்க பழ வினைஇகள் தீருமோ? தொடை அமர்த்தி குடர் களைந்த வடிவு அடைந்து உய் நெஞ்சமே!
பொருள்:-
பெரிய சடை வளர்தலாலும் தாடி வைப்பதாலுமட்டும் தவம் சிறக்குமா என்ன? கொடை வளர்த்துத் தானம் செய்வதான் மட்டுங் கடவுள் ஞானங் கைகூடுமோ? படையமைத்துப் பகையை வெல்லுஞ் செயலாற் பழவினைகள் நம்மை விட்டு விலகுமா? இது யாவும் நம் முயற்சியால் நிகழ்வது, ஆதலால் சிறப்பன்று, ஆதலால் இரணியனைத் தன் தொடையில் அமர்த்திப் பண்டு குடல் களைந்த நரசிம்மம் என்னும் வடிவை அடைந்து உய்வாய் நெஞ்சே!
Can one attain penance by growing long hair and beard? Does doing philanthropy entail one to knowledge of supreme? Does organizing an army and battling and outwitting a foe lead to neutralizing of one's Karmas? All these are by one's own effort and are not the best, so please oh heart surrender to the beautiful form (of Narasimha) which killed Hiranyakashipu by placing him on the thighs and plucked out his intestines!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக