அகமுரைத்த புறமுரைத்த வகவைகாண வழியிலா இகமுரைத்த பரமுரைத்த விருமைதாண்டி யளவிலாச் சுகமுரைத்த மறமுரைத்த வறமுரைத்த மேன்மொழி முகமுரைக்க முடிவுரைக்க தமிழதற்கு முடியுமே?
அகம் உரைத்த புறம் உரைத்த அகவை காண வழி இலா இகம் உரைத்த பரம் உரைத்த இருமை தாண்டி அளவு இலா சுகம் உரைத்த மறம் உரைத்த அறம் உரைத்த மேல் மொழி முகம் உரைக்க முடிவு உரைக்க தமிழ் அதற்கு முடியுமே?
அகப்பொருளும் புறப்பொருளும் உரைத்த, தன்னுடைய அகவை காண வழியே இல்லாத, இகம் மற்றும் பரத்துக்கு வழிவகுத்த, இருமை என்னும் நிலையைக் கடந்த, அளவு என்பதற்கு அடங்காத, சுகமும் அறமும் மறமும் போதித்த, மேன்மையான மொழியான தமிழுக்கு, முகமோ முடிவோ உரைக்க யாரால் இயலும்!
The great language which has literature on knowledge of family life and outward world governance, which has given ways to live well in this life and the afterlife, that which is beyond the dualities and that which cannot be measured, that which gives good wisdom on valour, dharma and pleasure, can the beginning and end of such Thamizh be enumerated by anyone?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக