வியாழன், 28 ஆகஸ்ட், 2025

பிழைபொறுப்பாய் கலிப்பா

 பிழைபொறுப்பாய்ப் பிள்ளையுன புகழ்பாடத் தாமதித்தேன் மழைமுகிலாய் வரமருளும் மதகளிறே மதியளிப்பாய் விழைபொழியுஞ் சித்தமெல்லாம் விரைமலரா லுனைப்பணியத் தழைதமிழாற் றளராது தனியானைப் போற்றிடவே

 

 

பிழை பொறுப்பாய்ப் பிள்ளை உன புகழ் பாடத் தாமதித்தேன் மழை முகிலாய் வரம் அருளும் மத களிறே மதி அருள்வாய் விழை பொழியும் சித்தம் எல்லாம் விரை மலரால் உனைப் பணியத் தழை தமிழால் தளராது தனி ஆனைப் போற்றிடவே! 

 

உனது புகழைத் தாமதமாக பாடிய என்னை பொறுத்தருள்வாய், மழை முகில் போன்ற கருணை கொண்டு உடனே வரம் அருளும் மத யானையே, எனக்கு மதி அருள்வாய், மொத்த ஆசையும் சிந்தையும் உன்னையே நறு மலர்களால் தூவிப் பணியவும் தழைக்கும் தமிழால் தளராது துதி செய்யவும் தனி ஆனையான உன்னையே போற்றும்படி அமைய!

 

படம் 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...