செவ்வாய், 2 செப்டம்பர், 2025

ஆறுமுக விருதம்

 

ஆறுமுக மன்றுதித்த வாண்டவனைப் போற்றுகவே
ஆனைமுகன் றம்பியென வனுதினமும் போற்றுகவே
ஆறுமக நன்குடைத்த வாண்டனைப் போற்றுகவே
ஆதியுமை வேலளித்த வாடவனைப் போற்றுகவே
ஆறுமுக மன்பர்தமக் கருள்பவனைப் போற்றுகவே
ஆழிதுயின் மாதவன்றன் மருமகனைப் போற்றுகவே
ஆறுமுக மாறுமுக மாறுமுக மேத்துகவே
ஏறுமகம் வாழ்வணைய வெந்நாளு மேத்துகவே
 
 
சீர் பிரித்து-
ஆறு முகம் அன்று உதித்த ஆண்டவனைப் போற்றுகவே
ஆனை முகன் தம்பி என எந்நாளும் போற்றுகவே
ஆறு முகம் நன்கு உடைத்த ஆண்டவனைப் போற்றுகவே
ஆதி உமை வேல் அளித்த ஆடவனைப் போற்றுகவே
ஆறு முகம் அன்பர் தமக்கு அருள்பவனைப் போற்றுகவே
ஆழி துயில் மாதவன்றன் மருமகனைப் போற்றுகவே
ஆறும் உக மாறுமகம் ஆறுமகம் ஏத்துகவே
ஏறு முகம் வாழ்வு அணைய எந்நாளும் ஏத்துகவே
கங்கை என்னும் ஆற்றின் முகம் முன்பு உதித்தவனைப் போற்றுக ஆனை முகன் தம்பி என்று அவனைப் போற்றுக நல்ல ஆறு முகங்களை உடைய ஆண்டவனைப் போற்றுக ஆதி உமையாள் வேல் அளித்த ஆடவனைப் போற்றுக ஆறுதல் தரும் முகம் பத்தர்க்கு அருள்பவனைப் போற்றுக பாலாழியின் கண் துயிலும் மாதவன் மருகன் என்று போற்றுக ஐந்து புலன்களும் ஆறாம் அறிவான மனமும் ஒரு சேர உகந்து பிறர்க்குப் பதிலளிக்கும் போதும் முருகா முருகா என்று ஆறுமகனின் நாமத்தையே ஏத்துக அது எந்நாளும் செய்யுங்கால் வாழ்வில் ஏறுமுகம் தானே வந்தடையும்!
Praise the lord who appeared in the Ganges, praise him as the brother of Gajanana, Prasie the lord who has six exquisite faces, praise the God who was given vEl by Aadhiparashakti, Praise the God who showers compassion on his devotees, praise the God as nephew of Madhava who reclines in the ocean of milk, Uniting the five senses and the mind even while replying use the name of Shanmukha thereby leading to unstoppable growth throughout life!
 
படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி