செவ்வாய், 2 செப்டம்பர், 2025

வேலைவேலைவேலை விருத்தம்

 

வேலைவேலை வேலையென்று மூன்றுவேளை வேட்டலோ?
வேலைவேலை வேலையென்று மூன்றுவேளை வேட்டலோ?
வேலைவேலை வேலையென்று மூன்றுவேளை வேட்டலே! 
வேலைவேலை வேலையென்று மூன்றுவேளை வேட்டலே!
 
 
வேலை வேலை வேலை என்று மூன்று வேளை வேட்டலோ ?
ஏல் ஐ வேலை வேலை என்றும் மூன்று வேளை வேட்டலோ ?
ஏலை வேலை வேலை என்றும் ஊன்று வேளை வேட்டலே!
வேலை வேல் ஐ வேலை என்று மூன்று வேளை வேட்டலே!
மூன்று வேளையும் வேலை வேலை என்று நமது பணியிலே மூழ்கிக் கிடப்பதா நம் வேண்டுதல் ?
முனைப்புடைய அழகிய சாகரமாக உள்ள இச்சம்சார வாழ்க்கையின் மூன்று வேளையும் மூழ்கிக் கிடப்பது தான் நம் வேண்டுதலா? அவ்வாறு அல்லாமல் தன்னை வற்றவைத்ததை மாற்றி இயல்பான் நீரை மீண்டும் அளிப்பதற்காக வேலாயுதத்திடம்
இரங்கி நின்றதாம் கடல்! அப்பெருமைக்குரிய வேலை என்றும் ஊன்றி நிற்கும் வேளான முருகனை வேண்டுதலே, தவிற அழகிய பாற்கடலில் தன் கையில் வேல்/ சக்ர ஆயுதத்தைக் கொண்ட திருமாலின் வேலை (கைங்கர்யம்) என்பதே மூன்று வேளையும் எமது வேட்டலாம்!
We are constantly engulfed in our job at all times, is this truly our wish? In this seemingly beautiful sea called life we have been given several works, is it our wish to remain in that? No, actually we are here to be in the service of the wielder of the vEl which dried up the seas Lord Murugan and the Lord Madhava who reclines in the ocean of milk holding his weapons like Sudarshana Chakra - that is truly our wish!
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி