சனி, 20 செப்டம்பர், 2025

மெய்யும் மெய்யும் விருத்தம்

 மெய்யுமெய்யு மியைந்திருக்கப் பொய்யுரைத்த லாகுமோ

பொய்யுமெய்யும் புனைந்திருக்க மெய்ம்மலிந்து போகுமோ
பொய்யதோங்க மெய்யொடுங்க வுய்யவாறு கூடுமோ
பையநாக முறங்கிநிற்கு மெய்யைநாடி யுய்மினே


மெய்யும் மெய்யும் இயைந்து இருக்கப் பொய் உரைத்தல் ஆகுமோ பொய்யும் மெய்யும் புனைந்து இருக்க மெய் மலிந்து போகுமோ பொய் அது ஓங்க மெய் ஒடுங்க உய்ய ஆறு கூடுமோ பைய நாகம் உறங்கி நிற்கும் மெய்யை நாடி உய்மினே


When truth is in synchronicity there is no question of speaking falsehood, but when there is a mix of truth and falsehood the value of truth goes down, when it reaches the stage of complete falsehood there is no way of salvation, since these are not in our control surrender ye To the truth behind all truths that sleeps on a serpent (Lord MahaVishnu) and attain salvation!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி