நாரா யணநாம நம்மை நெறிப்படுத்தும்
பாரா யணஞ்செய்யப் பாவ மறுத்தெறியும்
நேரா யனயாவு நீள வரத்தருளும்
வேரா யனவேண்டா விண்ணை யடைவதற்கே
நாராயண நாமம் நம்மை நெறிப்படுத்தும்
பாராயணம் செய்யப் பாவம் அறுத்து எறியும்
நேர் ஆயன யாவும் நீள வரத்து அருளும்
வேர் ஆயன வேண்டா விண்ணை அடைவதற்கே
நாராயண நாமம் நம்மை நன்னெறிப் படுத்தும்
அதனைப் பாராயணம் செய்து கொண்டு இருக்க நமது பாவங்களை அது அறுத்து எறியும்
நேர்மை உள்ளவற்றை நமக்கு வரமாக நீள் பெற அருளும்
இந்த ஒரு முறையே போதும் விண்ணாகிய வைகுந்தத்தை அடைய, வேரிலிரிந்து வேறு சாத்திரங்கள் ஆய வேண்டுமா என்ன?
The holy name of Narayana brings us into the right path, by reciting it regularly all our sins will be dissolved, it will keep giving us all Dharmic boons in plenty, and there is no need to search for other paths to attain the celestial abode of Vaikuntha ( salvation) other than this path of singing the name of Narayana!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக