திங்கள், 22 செப்டம்பர், 2025

பழையவேந்து தரவு கொச்சகக் கலிப்பா

 பழையவேந்து நெடியனாம் பரமனேந்து கொடியனே

கழுகுவேட மளிதருங் கருணைமேவு கருடனே
வழமையாக விழிகொளா விடமிழிந்து மகிழ்வனே
விழவுமேவு பருவமா லடியர்க்காண வந்தையோ!

சீர் பிரித்து

பழைய வேந்து நெடியனாம் பரமன் ஏந்து கொடியனே கழுகு வேடம் அளி தரும் கருணை மேவு கருடனே வழமையாக விழி கொ(ள்)ளா இடம் இழிந்து மகிழ்வனே விழவு மேவு பருவமால் அடியர் காண வந்தையோ!

Pazhaya vEndhu nediyanaam paraman Endhu kodiyanE
kazhugu vEdam aLi tharum karuNai mEvu karudanE
vazhamaiyaaga vizhi koLaa idam izhindhu magizhvanE
vizhavu mEvu paruvamaal adiyark kaaNa vandhaiyO ?


பழங்காலத்திலிருந்து அனைவருக்கும் அரசனான நெடியவனான பரமனாகிய திருமால் தன் கொடியாக வீற்றிருப்பவனே, கழுகு வேடம் கொண்டு நின் ஆசியைத் தர வந்த கருணை உள்ளம் கொண்ட கருடனே! வழமையாக இந்த உயரத்தில் உன்னைக் காண இயலாது, எனினும் நீ இறங்கி வந்து மகிழ்ந்தாய், இது விழாக்கள் நிறைந்த புரட்டாசி மாதம் என்பதால் நீ உனது பத்தர்களைக் காண வந்தாயோ?

You are the flag of the old and supreme being Mahavishnu, you have come as an eagle to afford us a Darshan of yourself due to your compassion, normally we will not be able to see you at this height but you have come down in high spirits, is it because the holy month of Purattasi is happening you came down to see your devotees?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி