பத்திர மேற்றுயில் பாலகன்
பத்திர மேற்றுயர் பாலகன்
சத்திர மேற்றுயர் பாலகன்
புத்திரி யேற்றுயர் பாலகன்
அத்திர மேற்றொரு பாலகன்
அத்திர மேற்றொரு பாலகன்
நித்தமு மேத்திரு பாலகன்
மொத்தமு மேற்றுயர் கொள்வனே
இலையின் மேல் துயிலும் பாலகனான கண்ணனைப், பத்திரம் (சரணாகதி என்று இருந்த பாலகன்) ப்ரஹ்லாதன், சத்திரமாகிய குடையை ஏற்று உயர்ந்த பாலகனான வாமனன், அவன் புத்திரியை மணந்து உயர்ந்த பாலகன் முருகன், அஸ்திரம் ஏந்தும் பாலகனான இராமபிரான், அவனையே ஸ்திரம் என்று நம்பி அனைத்துமாக ஏற்ற இலக்குமணன், இவர்களையெல்லாம் நித்தமும் துதிக்கும் இளம் பிள்ளை சகல சௌபாக்கியங்களும் பெற்று உயர்வடைவான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக