வியாழன், 25 செப்டம்பர், 2025

யமனில் தொடங்கி சிவனில் ஈறும் வெண்பா

யமன்றீண்டு பால னிமைப்பொழிதிற் காக்க

யமன்மாயக் காலா லுதைத்தான் - றமர்க்காக்க

யாதுங் கொடுக்கு மிணையிலா மாதேவன்

மாதொரு பாகன் சிவன் 


யமன் தீண்டு பாலன் இமைப் பொழுதில் காக்க

யமன் மாயக் காலால் உதைத்தான் - தமர் காக்க

யாதும் கொடுக்கும் இணை இ(ல்)லா மா தேவன்

மாது ஒரு பாகன் சிவன் 

Yeman TheeNdu paalan imaip pozhuthil kaakka

yaman maayak kaalaal uthaiththaan thamar kaakka

yaathum kodukkum iNai ilaa maadhevan

maadhoru paagan sivan

யமன் தீண்டும் பாலனான மார்க்கண்டேயரை இமைப் பொழுதினில் காக்கயமன் மாயும் படியாக காலால் உதைத்தான் , தமது அடியார்களுக்காக யாது வரங்களையும் அள்ளித் தரும் இணை இல்லா மஹா தேவன் சத்தியை ஒரு கூறாக கொண்ட சிவபெருமான் 


To save the boy MarkanDeya when the Lord of death Yama came to take him, he kicked Yama into oblivion, He gives everything for his devotees this unequalled MahaDeva has Sakthi as his half and he is Shivan





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி