வெள்ளி, 5 செப்டம்பர், 2025

அறிவால் கலி விருத்தம் (தோடகம்)

அறிவா லறிவா ரருவாய் விளங்கும் நெறிவா யறிவார் நினைவா ருருவாய்ப் பொறிவா யறிவார் புனறீ யிணையச் செறிவா ரறியுஞ் சிவசத் தியனே

 

 

(முருகா முருகா முருகா முருகா) 

அறிவால் அறிவார் அருவாய் விளங்கும் 

நெறிவாய் அறிவார் நினைவு ஆர் உருவாய் 

பொறி வாய் அறிவார் புனல் தீ இணையச் 

செறிவார் அறியும் சிவ சத்தியனே 

 

அறிவால் அறிபவர்க்கு அருவாக விளங்கியும், நெறிவாய் கரும மார்க்கத்தில் வருவோர்க்கு நினைவில் தங்கும் அழகிய உருவாகவும், ஐம்பொறிகளை அடக்கி குண்டலினி யோகம் பயில்வோருக்கு நீரும் தீயும் இணையுமாறு (சிவ சத்தி இணைய) செறிவாருக்கு சிவமும் சத்தியும் இணைந்த வடிவமாக விளங்குபவனாம் முருகன்! 

For the seekers in the path of wisdom (Jnana) he (Murugan) becomes the formless, for those in the path of prescribed worship form he comes with his form which is beautiful and can be fondly remembered by the mind, for those who are in the path of taking control of the senses and adhering to the Kundalini Yoga where the aim is the meeting of fire and water (Shiva and Shakti) he becomes the unified of form of Shiva Shakti

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி