செந்நாச் சிறப்புடைத்த சீரார் புலவர்சொ
லெந்நாளும் பொய்க்கா தெனவுணர்ந் – தந்நாளிற்
சங்கம் வளர்த்துத் தமிழாண்ட மன்னர்தந்
தங்குபுகழ் தாழ்த்தா துலகு
சீர் பிரித்து :-
செம் நா சிறப்பு உடைத்த சீர் ஆர் புலவர் சொல்
எ நாளும் பொய்க்காது என உணர்ந்து அ நாளில்
சங்கம் வளர்த்துத் தமிழ் ஆண்ட மன்னர் தம்
தங்கு புகழ் தாழ்த்தாது உலகு
செம்மையான மொழி ஆற்றலும் செல்வமும் உடைய சிறப்புப் புலவர்களின் சொல்லானது எந்நாளும் பொய்க்காது என உணர்ந்து அந்நாளில் சங்கம் வளர்த்துத் தமிழை ஆண்ட மன்னர்கள் தம் தங்கு(என்றும் தங்கும்) புகழை என்றுமே தாழ்த்தாது இவ்வுலகு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக