ஞாயிறு, 19 அக்டோபர், 2025

நிறைமதி வெண்பா

நிறைமதி சீர்வளம் நேரற மாளுங்

குறைவிலி வாழ்வகங் கோரா - துறைதிரு 

மார்பா மணிவண்ணா வாழ்வாய்நீ யென்பார்க்குத் 

தீபா வளிவளர்க்குந் தேசு 



நிறை மதி சீர் வளம் நேர் அறம் ஆளும் 

குறைவு இலி வாழ்வு அகம் கோராது உறை திரு 

மார்பா  மணிவண்ணா வாழ்வாய் நீ எனபார்க்கு 

தீபா வளி வளர்க்கும் தேசு 


நிறை மதியும் சீர் வளமும் நேர்மை அறம் ஆளும் குறைவிலாத வாழ்வும் அகமும் வேண்டாது, திரு உறையும் மார்பனே மணிவண்ணனே வாழ்வாய் நீ என்று பகவானுக்குப் பல்லாண்டு பாடுவோர்க்கு இந்தத் தீபாவளித் திருநாள் இன்னும் பிரகாசத்தைத் தரும், பகவானையே எண்ணி இருக்கும் அடியாரின் வாழ்வை எவ்வாறு நிறைக்க வேண்டும் என்பது அப்பகவானை விட யாருக்குத் தெரியும் !


Those who do not vocally ask for a wholesome intellect, great wealth, a righteous (Dharmic) way of life and a life and mind filled without any problems, but instead keep praising the Lord as the one Who has Lakshmi always residing in his heart, the Dark hued Vishnu to keep living for ever, for those Bhaktas this day of Deepavali will add even more splendour, for doesnt our Lord MahaVishnu know what to give his dear devotees do they even need to spell it out?







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி