வியாழன், 23 அக்டோபர், 2025

சத்திநாதன் விருத்தம்

சத்திநாதன் றாதையென்ன சார்ந்தவர்க்கு வரம்பிலாப்

புத்திநாத னண்ணனென்ன புத்திதோன்று ஞானமா 

முத்திநாதன் மாமனென்ன மூப்பிலாத முருகுடை 

யத்திநாத னளியளிக்க வானெமென்ன வையமே 



சத்தி நாதன் தாதை என்ன சார்ந்தவர்க்கு வரம்பு இ(ல்)லா 

புத்தி நாதன் அண்ணன் என்ன புத்தி தோன்று ஞானமா 

முத்தி நாதன் மாமன் என்ன மூப்பு இல்லாத முருகு உடை

அத்தி நாதன் அளி அளிக்க வானம் என்ன வையமே !


பராசக்தியின் நாதன் தனது தந்தையைப் போன்று தன்னைச் சார்ந்தார்க்கு வரம்பில்லாது , புத்திக்கு நாதனான தனது அண்ணன் விநாயகரைப் போல் தனது அன்பர்களின் புத்தியில் உட்டோன்றும் ஞானமாய் விளங்க, முத்திக்கு அதிபதியான தனது மாமன் திருமாலைப் போன்று மூப்பில்லாத அழகைக் கொண்ட ஹஸ்தி நாதன் (தேவானையின் கேள்வன்) அருள் அளிக்க இவ் வுலகமே வானுலகம் போன்று விளங்குமன்றோ !

Lavishly granting boons to his devotees like his father Lord of Shakti, illuminating the intellect/ mind of his devotees like his brother Vinayaka, he is ever youthful and handsome like his maternal uncle Vishnu who grants salvation to Jivas, when such a Lord (Murugan) of the Elephant (Devasena) is there with us to shower his grace this earth would resemble the heavens! 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி