வெண்டா மரையாளை வேதற் கினியாளை வீணைகரங்
கொண்டா ணிறையாளைக் கூத்தனூர் மன்னு குருவடிவை
யெண்டா மறையாளை யேரே றனத்தாளை யேத்துதினந்
தொண்டா முறைசெய்யச் சொர்க்கத் துயர்வாகுந் தொல்லுலகே
சீர் பிரித்து:-
வெண் தாமரையாளை வேதன்கு இனியாளை வீணை கரம்
கொண்டு ஆள் நிறையாளைக் கூத்தனூர் மன்னு குரு வடிவை
எண் தா மறையாளை ஏர் ஏறு அ(ன்)னத்தாளை ஏத்து தினம்
தொண்டு ஆ முறை செய்யச் சொர்க்கத்து உயர்வு ஆகும் தொல் உலகே
வெள்ளைத் தாமரை மலர் மேல் வீற்றிருப்பவளைப், பிரம தேவற்கு இனியவளைத், தனது கரத்தில் வீணையைக் கொண்டு ஆளுமை செய்யும் நிறைவானவளைக், கூத்தனூர் என்னும் தலத்தில் என்றும் நிலைத்திருக்கும் குரு வடிவானவளை, எண்ணங்கட்கு அப்பாற்பட்ட வேத வடிவனாளை, அழகான ஊர்தியான அன்னத்தை உடையவளை தினம் ஏத்தி முறையே சீவர்கள் தொண்டு செய்தால் சொர்கத்தை விட உயர்வு ஆகும் இத் தொல் உலகம் !
She who has sits on White lotus, who is the sweetheart of Brahma, who holds a Veena in her hands and one who is wholesome and the abode of all abilities, who stays in the temple of koothanur in the form of a guru, one who is beyond thought and form of the Vedas, if the Jeevas keep praising and do service to that Goddess Saraswathi, this earth will become greater than even heaven!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக