புதன், 1 அக்டோபர், 2025

மூல வெளிப்பாடாய் (நவராத்திரி கலி விருத்தம்)

 மூல வெளிப்பாடாய் முப்பெருந் தேவியர்

ஞால நலம்பெற மும்மூன்று நாள்கள்
சீலம் பெருகச் சிறப்பாய் விழவமர்ந்த
கோலம் விழிகாணக் குற்றங்கள் தூசாமே

(வெண்டளைகளாலமைந்த கலி விருத்தம்)


மூலத்தின் வெளிப்பாடாக முப்பெருந்தேவியர்களான துர்க்கை, இலக்குமி சரசுவதி இஞ்ஞாலம் நலம் பெற ஒன்பது நாள்கள் சீரும் செல்வமும் பெருகச் சிறப்பாய் நவராத்திரி என்னும் விழாவில் அமர்ந்த கோலத்தை விழியால் காண நம் குற்றங்கள் யாவும் தூசாய் மாயும் அன்றோ!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி