சிறப்பென்றுஞ் சேந்தனைச் சிந்தித்தல் - ஞான்றும்
மறப்பின்றி மாண்பொடு வந்தித்தல்
உறுப்பொன்றிக் கந்தனைச் சேவித்தல் - மற்ற
உணர்வின்றிப் புந்தியிற் பாவித்தல்
பொறுப்பென்று மூலனைத் த்யானித்தல் - நாகப்
பொருப்பொன்றி நாதனைப் போற்றிடுதல்
இறப்பின்றி வேலனைச் சேர்ந்திடவே - மாயப்
பிறப்பறுக்கும் பெம்மான்றாள் மறவாதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக