திங்கள், 20 அக்டோபர், 2025

உமை முருகா வெண்பா

 உமைமுருகா மான்மருகா வொய்யாரி வள்ளி

யமைவிலகாக் காதலா வுன்றன் - சுமைகருதா

முப்பொழுது முன்னாம மூச்சாய் முணுமுணுக்க

வெப்பொழுது வாய்க்கு மெமக்கு



உமை முருகா மால் மருகா ஒய்யாரி வள்ளியமை விலகாக் காதலா உன்றன் சுமை கருதா மு பொழுதும் உன் நாமம் மூச்சாய் முணுமுணுக்க எப்பொழுது வாய்க்கும் எமக்கு 


உமையம்மை பயந்த முருகனே திருமாலின் மருகனே ஒய்யாரி வள்ளி அம்மையினை விலகாதக் காதலனே, உன்றன் சுமையையும் கருதாது (உன்னைத் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருப்பதால்) , முப்பொழுதும் உன் நாமத்தை மூச்சாக முணுமுணுக்கும் படியாக எப்பொழுது தான் வாய்க்கும் எமக்கு! 


Oh son of Uma, Muruga! Nephew of MahaVishnu, lover of Goddess VaLLi who does not ever leave her even for a moment, When will we get the habit of constantly chanting your name as often as we breathe  even discounting the trouble it will create you by our constant remembrance!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி