சேறகற்று முனைவகற்றுச் சேறொடுங்க நீர்நிலை
தேறகத்து முனைவதில்லை தீம்புனற்க ணூடுபோய்
தூறகற்றி வயல்கள்சென்று தூயவாழ்வ தீயுமா
றூறகற்று மவுனங்காக்க வோங்குமேன்மை கிட்டுமே
சேறு அகற்றும் முனைவு அகற்று சேறு ஒடுங்க நீர் நிலை
தேறு அகத்து முனைவது இல்லை தீம் புனல் கண் ஊடு போய்
தூறு அகற்றி வயல்கள் சென்று தூய வாழ்வு அது ஈயும் ஆறு
ஊறு அகற்று மவுனம் காக்க ஓங்கு மேன்மை கிட்டுமே
சேற்றை அகற்றுவதற்குத் தனியே முனைவை எடுக்காதே , ஏனென்றால் நிற்கும் நீர் (சேறு கலந்த நீர்) தெளிவான அகத்தை தேடி முனைவதில்லை அதில் தானாக தீம்புனல் சேர்கிறது அதன் ஊடாகப் போய் அது தன் தூற்றை அகற்றி வயல்கட்குச் சென்று தூய வாழ்வு பல உயிரினங்கட்கு அளிக்கின்றது அதன் வழியே (அதே போன்று) நாமும் ஊறு அகற்றும் மவுனைத்தை காத்தால் ஓங்கு மேன்மை தானாக வந்தடையும் என்றவாறு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக